Skip to main content

‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு 

 

rrr movie trailer release date announced

 

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படங்கள் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றன. இப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலி பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இருவரையும் வைத்து 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தை இயக்கிவருகிறார். இதில் ஆலியா பட், சமுத்திரக்கனி, பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

 

பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது. 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவருகிறது. ஏற்கனவே ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

 

இந்நிலையில், படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படத்தின் ட்ரைலர் வரும் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர்.

 

 

 

மிஸ் பண்ணிடாதீங்க

சார்ந்த செய்திகள்