ராஜமௌலியின் அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

rrr movie trailer new release date announced

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படங்கள் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றன. இப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலி பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இருவரையும் வைத்து 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தை இயக்கிவருகிறார். இதில் ஆலியா பட், சமுத்திரக்கனி, பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பெரும்பொருட்செலவில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது. 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, இறுதிக்கட்ட பணியில்தீவிரம் காட்டிவருகிறது. ஏற்கனவே ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="1b4f322d-d428-4a52-98de-47d6869e9476" height="319" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/ik-ad.jpg" width="532" />

சமீபத்தில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ட்ரைலர்வரும் 3 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் சில காரணங்களால் படத்தின் ட்ரைலர்வெளியாகாத நிலையில் தற்போது புதிய தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி ஆர்.ஆர்.ஆர் படத்தின் ட்ரைலர்டிசம்பர் 9 ஆம்தேதி வெளியாகும் எனக்கூறப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில்உள்ளனர்.

RRR ss rajamouli
இதையும் படியுங்கள்
Subscribe