Advertisment

நட்பை தொடர்ந்து 'நாட்டு கூத்து'... புதிய அப்டேட்டை வெளியிட்ட 'ஆர்.ஆர்.ஆர்.' படக்குழு!

rrr movie second song release date announced

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படங்கள் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றன. இப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலி பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இருவரையும் வைத்து 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தை இயக்கிவருகிறார். இதில் ஆலியா பாட், சமுத்திரக்கனி, பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Advertisment

400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது. 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, இறுதிக்கட்ட பணியில்தீவிரம் காட்டிவருகிறது. மேலும், 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ஏற்கனவே வெளியான 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் 'நட்பு' பாடல் நல்ல வரவேற்பைபெற்ற நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 10ஆம் தேதி 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் 'நாட்டுகூத்து' பாடல் வெளியாகும் என படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் க்ளிம்ப்ஸ் யூடியூபில் 9.8 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ramcharan RRR ss rajamouli
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe