Advertisment

'ஆர்.ஆர்.ஆர்' கொண்டாட்டத்திற்கு கம்பி வேலி போட்ட திரையரங்கம்!

 rrr movie release theatre puts up barbed wires, fences front screen

இயக்குநர் ராஜமௌலி பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இருவரையும் வைத்து 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தை இயக்கியுள்ளார்.. இதில் ஆலியா பட், சமுத்திரக்கனி, பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.பெரும்பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில்வரும் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisment

இந்நிலையில் ஸ்ரீகாகுளத்தில்உள்ள திரையரங்கில் ஒன்றில் திரைக்கு முன் உள்ள மேடையில் ரசிகர்கள் ஏறாமல் இருக்க கம்பி வேலியைதிரையரங்கு நிர்வாகம் அமைத்துள்ளது. பொதுவாக ரசிகர்கள் தங்களதுவிருப்பநாயகனை திரையில் பார்த்த உற்சாகத்தில் பேப்பரைகிழித்து தூவுவது, திரைக்கு முன் எழுந்து ஆடுவது என பல செயல்களில்ஈடுபடுவது வழக்கம். இன்னும் சில ரசிகர்கள் இதற்கு மேலே சென்று திரையரங்கு திரையையே கிழிப்பது போன்ற செயல்களிலும்ஈடுபடுவது உண்டு. இந்த மாதிரியான சவங்களை தவிர்க்கவேதிரைக்கு முன் கம்பி வேலி அமைப்பது, ஆணி பதிப்பது உள்ளிட்டவைகளை செய்வதாக திரையரங்கு நிர்வாகங்கள் தெரிவித்துள்ளது.

Advertisment

RRR ss rajamouli theatre
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe