Advertisment

ஆர்.ஆர்.ஆர். படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்!

rrr

பாகுபலி படங்களின் பிரம்மாண்ட வெற்றியைதொடர்ந்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் இயக்கி வரும் படம் (ஆர்.ஆர்.ஆர்.) என்ற 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து சுமார் 400 கோடியில் உருவாகும் இப்படத்தில் பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன், ஆலியா பாட் மற்றும் தமிழ் நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பலரும் எதிர்பார்க்கும் இந்தபடமானது இந்த வருட ஜூன் மாதம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது.

Advertisment

தற்போது கரோனா வைரஸ் பரவலால் இப்படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படம் அடுத்தாண்டு ஜனவரி 8ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்ததேதியிலும் பட வெளியீட்டுக்கு சாத்தியமில்லை என்பதை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. கரோனா ஊரடங்கு முடிந்து சகஜ நிலைக்கு திரும்பியவுடன் புதிய தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு இப்படத்தை வெளியிட அதிக வாய்ப்பிருப்பதாகவும் ஒருபுறம் கூறப்படுகிறது.

Advertisment

ss rajamouli RRR
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe