Advertisment

ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் விருது; மகிழ்ச்சியில் ஆர்.ஆர்.ஆர் படக்குழு

rrr movie grabs 4 award in Hollywood Critics Awards

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். வசூலிலும் கிட்டத்தட்ட ரூ.1000 கோடி ஈட்டி சாதனை படைத்தது. இப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருது வென்றது. அப்போது ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநர்களான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கேமரூன் ஆகியோரும் இந்தப் படத்தை வெகுவாகப் பாராட்டினர்.

Advertisment

இதையடுத்து 95வது ஆஸ்கர் விருதில் சிறந்த பாடல் (Original Song) பிரிவில் நாமினேஷன் லிஸ்டில் அந்த பாடல் இடம்பெற்றுள்ளது. வருகிற மார்ச் 12 ஆம் தேதி ஆஸ்கர் விருது நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்காக அமெரிக்க சென்றுள்ளனர் படக்குழுவினர். அமெரிக்காவின் பிரபல நிகழ்ச்சியான ‘குட்மார்னிங் அமெரிக்கா’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ராம் சரண் சமீபத்தில் பங்கேற்றார். தென்னிந்திய அளவில் அதில் கலந்து கொள்ளும் முதல் நடிகர் என்ற பெருமையை பெற்றார்.

Advertisment

ஆர்.ஆர்.ஆர். படம் தொடர்ந்து சர்வதேச விருதுகளை வாங்கி வரும் நிலையில் மேலும் ஒரு விருது விழாவில் விருதுகளை வாங்கியுள்ளது. ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் விருது விழாவில் சிறந்த ஆக்‌ஷன் திரைப்படம், சிறந்த சண்டைக்காட்சி, சிறந்த பாடல், சிறந்த சர்வதேச திரைப்படம் ஆகிய 4 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. இதற்கு ரசிகர்கள் படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

RRR ss rajamouli
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe