இணையத்தில் வைரலாகும் 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் க்ளிம்ப்ஸ்!

RRR movie glimpse video out now

இயக்குநர்ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படங்கள் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றன. இப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலி பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இருவரையும் வைத்து 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தை இயக்கிவருகிறார். இதில் ஆலியா பாட், சமுத்திரக்கனி, பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

400 கோடி பட்ஜெட்டில் உருவாகிவரும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவருகிறது.மேலும், 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படம் வரும் ஜனவரி 7ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் க்ளிம்ப்ஸைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ஆக்சன் காட்சிகள் நிறைந்த மிரட்டலான இந்த க்ளிம்பஸ் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

RRR ss rajamouli
இதையும் படியுங்கள்
Subscribe