Advertisment

"உங்களை எப்படி கூப்பிடுறது... சிவான்னு கூப்பிடவா இல்ல..." - சிவகார்த்திகேயனிடம் விளையாடிய ராஜமௌலி

rrr movie director rajamouli speech about actor sivakarthikeyan

Advertisment

இயக்குநர் ராஜமௌலி பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இருவரையும் வைத்து 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தை இயக்கியிருக்கிறார். இதில் ஆலியா பட், சமுத்திரக்கனி, பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ஜனவரி7ஆம்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் படத்தின் ப்ரீ புரொமோஷன் நிகழ்ச்சி நேற்று (28.12.2021)சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்ராஜமௌலி, ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் பேசிய படத்தின் இயக்குநர் ராஜமௌலி," சிவகார்த்திகேயன் சார் உதயநிதி சார் இருவரும் இந்நிகழ்விற்கு வந்ததற்கு முதலில் நன்றி. சிவகார்த்திகேயன்,உங்கள எப்படி கூப்பிடுறது? சிவான்னு கூப்பிடனுமா, இல்ல கார்த்திகேயன்னுகூப்பிடனுமா,இல்ல கார்த்தின்னுகூப்பிடனுமா? எப்படி கூப்பிடனும் சொல்லுங்க.. என் பையன் பெயர்கூட கார்த்திகேயன்தான்" என விளையாட்டாக கேட்டார். இதைஅரங்கத்தில் இருந்த அனைவரும் கைதட்டி ரசித்தனர். தொடர்ந்து பேசிய அவர்,ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் பெரும் ஆதரவைத் தந்துள்ளார் என்றும்,ட்ரைலர், போஸ்டர் எனப் படம் குறித்து எந்தவிதமான அறிவிப்பு வெளியானாலும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து இதயப்பூர்வமான பங்களிப்பை நல்கியுள்ளார் என்றும் தெரிவித்தார்.

actor sivakarthikeyan RRR ss rajamouli
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe