Advertisment

இந்தியாவில் முதல் வீடியோ; புதிய சாதனை படைத்த 'ஆர்.ஆர்.ஆர்'

rrr First Ever Indian Video Cross 10M Views Twitter

Advertisment

இயக்குநர் ராஜமௌலி, ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். ஆலியா பட், அஜய் தேவ்கன் ஆகியோரை வைத்து ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கியிருந்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படங்கள் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த நிலையில் ஆர்.ஆர்.ஆர் படமும் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. மேலும் இப்படத்தை ரசிகர்கள், திரை பிரபலங்கள், சினிமா விமர்சகர்கள் என பலரும் கொண்டாடினர்.

இந்நிலையில் இப்படத்தின் வீடியோ காட்சி ஒன்று ட்விட்டரில் சாதனை படைத்துள்ளது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஜூனியர் என்.டி.ஆரின் ஸ்டண்ட் காட்சியை ரசிகர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ தற்போது 1 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இது ட்விட்டரில் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்த முதல் இந்திய வீடியோ என்ற சாதனையை படைத்துள்ளது.

Jr NTR ramcharan RRR
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe