Advertisment

‘கிளைமாக்ஸ்க்கு வந்துட்டோம்..’ - எஸ்.எஸ்.ராஜமௌலி அறிவிப்பு!

bdags

Advertisment

'பாகுபலி' படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி வரும் படம் 'ஆர்.ஆர்.ஆர்' என்று அழைக்கப்படும் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது. தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து சுமார் 400 கோடியில் உருவாகும் இப்படத்தில் பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன், ஆலியா பட் மற்றும் தமிழ் நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பலரும் எதிர்பார்க்கும் இந்தப் படமானது, இந்த வருட ஜனவரி மாதம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் கரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு பணிகள்,தற்போது மீண்டும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆகையால் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் பிரம்மாண்ட சண்டைக் காட்சி ஒன்றை ஹைதராபாத்தில் படமாக்கினார்கள். அதனைத் தொடர்ந்து சில முக்கிய காட்சிகளைப் படமாக்கி வந்தது படக்குழு.

இந்நிலையில், நேற்று (ஜனவரி 19) முதல் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக எஸ்.எஸ்.ராஜமௌலி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து வில்லன் ஆட்களுடன் மோதும் பிரம்மாண்ட சண்டை காட்சி படமாக்கப்படுகிறது. இதன் படப்பிடிப்பு இன்னும் 20 நாட்கள் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RRR
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe