பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு; வசூலில் உச்சம் தொட்ட 'ஆர்.ஆர்.ஆர்'

ad

இயக்குநர் ராஜமௌலி பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இருவரையும் வைத்து 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தை இயக்கியுள்ளார்.. இதில் ஆலியா பட், சமுத்திரக்கனி, பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.பெரும்பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் நேற்று (25.3.2022) வெளியானது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும்,பார்த்த ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூலைபடக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி உலகம் முழுவதும் வெளியான ஆர்.ஆர்.ஆர் படம் முதல் நாளில் ரூ. 223 கோடி வசூல் செய்துசாதனை படைத்துள்ளது.தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் இந்தப்படம் அனைத்து சாதனைகளையும் முறியடித்து ரூ.120.19 கோடி வசூல் செய்துபாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்துள்ளது.மேலும் இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ரூ. 750 கோடி வசூல் செய்து பாகுபலி படத்தின் சாதனையை முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

ss rajamouli RRR
இதையும் படியுங்கள்
Subscribe