இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்நிறுவனத்தயாரிப்பின்கீழ் உருவாகியுள்ள ‘நெற்றிக்கண்’, ‘கூழாங்கல்’ ஆகிய திரைப்படங்கள் ரிலீசிற்குத் தயாராகி வருகின்றன. இதில், ‘கூழாங்கல்’ திரைப்படம் நியூசிலாந்தில் நடைபெற்ற சர்வதேச விருது விழாவில் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்தப் படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் விநாயக் இயக்கவிருக்கும் இப்படத்திற்கு, ‘வாக்கிங்/டாக்கிங்ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் மட்டும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. படம் குறித்து கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.