nayanthara

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து நடத்தும் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில், தற்போது தயாராகியுள்ள படம் 'கூழாங்கல்'. முதலில் வேறு ஒரு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வந்த இப்படம், பின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்திற்குக் கைமாற்றப்பட்டது. பி.எஸ் வினோத்ராஜ் என்ற அறிமுக இயக்குனர் இயக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Advertisment

விரைவில் இப்படத்தைத் திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம், முதற்கட்ட வேலையாகத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி வருகிறது.சமீபத்தில் நெதர்லாந்தில் நடைபெற்ற ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட, கூழாங்கல் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. இந்த நிலையில், 'கூழாங்கல்' திரைப்படம் இவ்விழாவில் விருது வென்றுள்ளதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சமூக வலைதளங்களில் இப்படக்குழுவினருக்குப்பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Advertisment