/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/3_122.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்திவருகிறார். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘கூழாங்கல்’ திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றுவருகிறது. இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் இரண்டாவது படமான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில், ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள அடுத்த படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தில் கவின் நாயகனாக நடிக்கவுள்ளதாகவும் அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் இயக்குநர் யார் என்பது உள்ளிட்ட முழுவிவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)