புதிய படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய விக்னேஷ் சிவன் - நயன்தாரா!

Vignesh Shivan

அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கி, வசந்த் ரவி, ரவீனா, பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் தயாராகியுள்ள படம் 'ராக்கி'. இப்படத்தின் பணிகள் முழுமையாக நிறைவுபெற்றதையடுத்து, படக்குழு ரிலீஸ் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில், ராக்கி படத்தின் வெளியீட்டு உரிமையை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து நடத்தும் தயாரிப்பு நிறுவனம் ஆகும். இத்தகவலை இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், அப்பதிவில் தானும், அருண் மாதேஸ்வரனும் உதவி இயக்குனராகப் பணியாற்றிய காலங்களில் இருந்தே நண்பர்கள் என்றும், அவரது முதல் படத்தில் இருவரது பெயரையும் இணைந்து பார்ப்பதில் மகிழ்ச்சி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ACTRESS NAYANTHARA vignesh shivan
இதையும் படியுங்கள்
Subscribe