இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி ஆகியோரது நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் மாரி 2. இப்படத்தில், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், காளி வெங்கட் ஆகியோர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தில், ரவுடி பேபி, மாரி கெத்து, மாரி ஆனந்தி ஆகிய பாடல்கள் இடம் பெற்றிருந்தது. இதில், டான்ஸ் மாஸ்டர் பிரபு தேவா நடன ஆசிரியராக பணியாற்றி தனுஷ் மற்றும் சாய் பல்லவி இருவரும் இணைந்து நடித்த ரவுடி பேபி பாடல் இணையத்தில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. தற்போது வரை 600 மில்லியன் பேர் இந்தப் பாடலை யூடியூப்பில் பார்த்து ரசித்துள்ளனர். இதன் காரணமாக, ரவுடி பேபி #Rowdy Baby என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

இந்த பாடல் 16 நாட்களில் 100 மில்லியன் பார்வையாளர்களையும், 41 நாட்களில் 200 மில்லியன் பார்வையாளர்களையும், 69 நாட்களில் 300 மில்லியன் பார்வையாளர்களையும், 104 நாட்களில் 400 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்து சாதனை படைத்திருந்தது. மேலும், வெளியாகி 157 நாட்கள் ஆன நிலையில், யூடியூப்பில் 500 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்து புதிய வரலாற்று சாதனை படைத்திருந்த நிலையில், தற்போது 600 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இந்திய சினிமா வரலாற்றில் எந்தப் பாடலும் செய்யாத சாதனையை ரவுடி பேபி பாடல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.