Advertisment

மாரி 2 படம் வருகின்ற டிசம்பர் மாதம் 21ஆம் தேதி வெளியாகிறது. முதல் பாகத்திலுள்ள காஜலை தவிர, முதல் பாகத்தில் உள்ள பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். முதல் பாகத்தில் இல்லாத சாய் பல்லவி மற்றும் டோவினோ தாமஸ் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர். முதல் பாகத்தை இயக்கிய பாலாஜி மோகன், இந்த பாகத்தையும் இயக்கியுள்ளார். அதேபோல முதல் பாகத்தை இசை அமைத்திருந்த அனிருத் இப்படத்தில் இசை அமைக்கவில்லை, அதற்கு பதிலாக யுவன் ஷங்கர்ராஜா இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். பல வருடங்கள் கழித்து தனுஷ் மற்றும் யுவன் ஷங்கர்ராஜா கூட்டணியில் உருவாகிறது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த படத்தில் ரவுடி பேபி என்னும் ஒரு பாடலை தனுஷ் ட்விட்டரில் இன்று காலை 11 மணிக்கு வெளியிட்டுள்ளார். மேலும் இந்த பாடலை எழுதி, பாடியவரும் தனுஷ்தான். நீண்ட நாட்களுக்கு பிறகு நடன இயக்குனராக பிரபு தேவா இந்த பாடலில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment