‘ரௌடி பேபி...’ பாடல் படைத்த புதிய சாதனை!

dhanush

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'மாரி 2'. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படத்திற்கு மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காத போதிலும் படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக நடிகர் தனுஷ் எழுதி பாடிய ‘ரௌடி பேபி...’ பாடலுக்குப் பட்டிதொட்டியெங்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், இப்பாடல் யூ-டியூப் தளத்திலும் தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைத்துவந்தது.

இந்த நிலையில், தற்போது புதிய சாதனையை ‘ரௌடி பேபி...’ பாடல் படைத்துள்ளது. யூ-டியூப் தளத்தில் இதுவரை 118 கோடி பார்வைகளைக் கடந்த இப்பாடல், தற்போது 5 மில்லியன் லைக்ஸ்கள் எனும் சாதனை மைல்கல்லை எட்டியுள்ளது. இது தென்னிந்திய சினிமாவில் வெளியான ஒரு பாடல் பெற்ற அதிகபட்ச லைக்குகளின் எண்ணிக்கையாகும். இச்சாதனையை நடிகர் தனுஷ் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.

actor dhanush
இதையும் படியுங்கள்
Subscribe