Published on 13/02/2019 | Edited on 13/02/2019

தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான மாரி 2 படத்தின் 'ரவுடி பேபி' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவரவேற்பை பெற்றது. இதையடுத்து இதன் வீடியோ பாடலும் யூடியூப்பில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்தது. இந்நிலையில் 'ரவுடி பேபி' பாடலை இதுவரை 20 கோடி (200 மில்லியன்) பார்வையாளர்களுக்கு மேல் கண்டு ரசித்து வருகின்றனர். இதன்மூலம் தென்னிந்திய திரையுலகில் அதிகப் பார்வையாளர்களைக் கொண்ட யூடியூப் வீடியோ பட்டியலில் ‘ரவுடி பேபி’ பாடல் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தது வருகிறது.