Skip to main content

130 மில்லியன் பார்வைகளை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்து வரும் தனுஷ் பாடல் !

Published on 27/01/2019 | Edited on 27/01/2019
maari2

 

 

2018 ஆம் ஆண்டில் அடுத்தடுத்து ஹிட் பாடல்களை வழங்கிய யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஆண்டின் இறுதியில் 'மாரி 2' படத்தின் 'ரௌடி பேபி' பாடல் படத்தின் பிரமாண்ட பாடலாக மட்டுமல்லாமல், யூடியூபில் மிகவும் குறுகிய காலத்தில் (2 வாரம்) 130 மில்லியன் பார்வைகளை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறது. யூடியூபில் தமிழ் பாடல்களில் நம்பர் 1 இடத்தை பிடித்ததன் மூலம் உலகளாவிய மேடையில் தமிழ் இசையை மீண்டும் உலக அளவில் கவனிக்க வைத்திருக்கிறது. முதன்முறையாக ஒரு தமிழ் வீடியோ பாடல் பட்டியலில் நம்பர் 1 இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் நாயகனாக நடித்த இப்படத்தில் நாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனுஷ் காமன் டிபியில் சாய் பல்லவி எங்கே? - கேள்வி கேட்கும் ரசிகர்கள்!

Published on 19/11/2020 | Edited on 19/11/2020
cdp

 

 

கடந்த 2018ஆம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான படம் மாரி 2. இந்த படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்திலுள்ள ‘ரௌடி பேபி’ பாடல் வெளியான நாள் முதலே பல மில்லியன் பார்வையாளர்களால் காணப்பட்டு  சாதனை படைத்தது. இந்த பாடல் யூ-ட்யூபில் வெளியாகி ஒரு வருடம் கடந்த நிலையில் தற்போது 100 கோடி பேர் பார்த்திருக்கின்றனர். இதற்கு முன்னதாக இந்திய திரைப்படங்களில் பஞ்சாப் மொழி பாடல் ஒன்றுதான், முதன்முதலில்  100 கோடி பேர் பார்த்து ரசித்தனர். அதன்பின் ஒன்றிரண்டு இந்தி பாடல்கள், இந்த சாதனையை படைத்துள்ளது.

 

ரௌடி பேபி பாடல், 100 கோடி பார்வையாளர்களை கடந்ததன் மூலம், அதிகம் பார்க்கப்பட்ட தென்னிந்திய பாடல் என்ற சாதனையையும் படைத்துள்ளது. இதனை தொடர்ந்து ரௌடி பேபி பாடல், 100 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டதை கொண்டாடும் விதமாக, படத்தின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார், 'காமன் டிபி' ஒன்றை வெளியிட்டது.

 

வுண்டர்பார் நிறுவனம் வெளியிட்ட காமன் டிபியில், தனுஷின் புகைப்படம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், காமன் டிபியில் சாய் பல்லவி எங்கே? என, சமூகவலைதளங்களில்  கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் அவர்கள், ரௌடி பேபி பாடலின் இச்சாதனைக்கு, சாய் பல்லவியின் சிறப்பான நடனமும் ஒரு காரணம். எனவே, அவருடைய புகைப்படமும், காமன் டிபியில் கண்டிப்பாக  இடம் பெற்றிருக்கவேண்டும் என கருத்துகளை பதிவிட்டு, கண்டனம்  தெரிவித்து வருகின்றனர்.

 

 

Next Story

ஒரே டயலாக்...இரண்டு படத்தில்...நடந்தது என்ன..?

Published on 24/12/2018 | Edited on 24/12/2018
maari2

 

 

 

தனுஷ் - பாலாஜி மோகன் கூட்டணியில் உருவான 'மாரி 2' படமும், கன்னட நடிகர் யஷ் நடிப்பில் 'கே.ஜி.எப்' படமும் கடந்த வெள்ளியன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த இரண்டு படத்திலும் ஒரே  வசனம் இடம்பெற்றுள்ளது தற்போது வைரலாகி வருகிறது. (if you are bad, i am your dad) 'இஃப் யு ஆர் பேட், அயம் யுவர் டாட்' என்ற இந்த வசன வரிகள் இந்த இரண்டு படங்களிலும் இடம்பெற்றுள்ளது. மேலும் இவை எப்படி இரண்டு படங்களிலும் இடம்பெற்றது என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்து வருகிறது. அதுவும் இவை இரண்டும் ஒரே நாளில் ரிலீசானதால் கன்னடத்தை பார்த்து தமிழில் காப்பி அடிக்கப்பட்டதா...? அல்லது தமிழை பார்த்து கன்னடத்தில் காப்பி அடிக்கப்பட்டதா...? என்ற குழப்பமும் நிலவி வருகிறது. உண்மையில் இந்த வசனம் பல ஆண்டுகளாக டி ஷர்ட்டுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.