/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sai-pallavi_1.jpg)
தனுஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர்ராஜா இசை அமைக்க, பாலாஜி மோகன் இயக்கினார். முதல் பாகத்திலிருந்த ரோபோ ஷங்கர், இதிலும் காமெடியனாக தனுஷுடன் நடித்திருக்கிறார்.
படம் வெளியாவதற்கு முன்பே இந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அதில் முக்கியமான ஒரு பாடலாக இருந்தது ரௌடி பேபி பாடல். இந்த பாடலுக்கு பிரபுதேவா நடன ஆசிரியராக இருந்தார். ரௌடி பேபி லிரிக் பாடலாக யூ-ட்யூபில் வெளியானபோதே 60 மில்லியன் வியூஸ்களை தொட்டது.
இதனை அடுத்து படம் வெளியான ஒரு சில வாரங்களிலேயே யூ-ட்யூபில் ரௌடி பேபி பாடலின் வீடியோ வெளியானது. வீடியோவாக வெளியான பின்பு பாடல் செம வைரலாக தொடங்கியது. 100 மில்லியனை அசால்ட்டாக தொட்டபின்பு, வீடியோவை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை மளமளவென எகிறத் தொடங்கியது.
அதுவரை தென்னிந்தியாவில் பலரால் பார்க்கப்பட்ட பாடல் வீடியோவாக இருந்தது தெலுங்கில் சாய் பல்லவி, வருண் டேஜ் நடித்த ஃபிடா படத்தில் வரும் வச்சிந்தே பாடல்தான். ஒரு வருடத்தில் சுமார் 175 மில்லியன் பார்வையாளர்கள் இந்த வீடியோவை பார்த்தது சாதனையாக இருந்தது. இதை அசால்ட்டாக வெளியான குறைந்த நாட்களிலேயே முந்தியது இந்த ரௌடி பேபி பாடல். தற்போது 200 மில்லியன்களையும் தாண்டி இன்று 250 மில்லியன் தொட்டிருக்கிறது. ரௌடி பேபி வீடியோ யூ-ட்யூபில் வெளியாகி இன்றுடன் 53 நாட்களாகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)