Roshni Prakash about bala and vanangaan mamitha baiju issue

குணச்சித்திர நடிகர் காளி வெங்கட் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தோனிமா’. இப்படத்தை பக்ரீத், சிகை, பட்சி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜெகதீசன் சுப்பு இயக்கியுள்ளார். இப்படத்தில் ரோஷினி பிரகாஷ், வைசவ் ராஜ், விவேக் பிரசன்னா, கண்ணன் பொன்னையா, பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் நாளை(20.09.2024) வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இயக்குநர் ஜெகதீசன் சுப்பு மற்றும் ரோஷினி பிரகாஷை நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக சந்தித்தோம்.

Advertisment

அப்போது ரோஷினி பிரகாஷிடம், ‘வணங்கான்’ படத்தில் இயக்குநர் பாலாவுடன் பணியாற்றிய அனுபவத்தையும் இப்படத்தில் இருந்து விலகிய மமிதா பைஜூ குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரோஷினி பிரகாஷ் பதிலளிக்கையில், “மமிதா பைஜூ குறித்த விவகாரம் எனக்கு தெரியாது. ஆனால் பாலாவுடனான படப்பிடிப்பு எனக்கு நல்லபடியாக அமைந்தது. அவர் ஒரு நண்பரை போல் பழகினார். படப்பிடிப்புக்கு வரும் போது எனக்கு ஸ்கிரிப்ட் கொடுத்து விடுவார். அதில் எனக்கு எதாவது சந்தேகம் இருந்தால் நேரடியாக அவரிடம் பேசுவேன். அவரும் நிறைய ஸ்பேஸ் கொடுப்பார். அதே போல் நடிக்க அதிக நேரம் ஆனால் அதற்கான நேரத்தையும் ஒதுக்கி கொடுப்பார்.

Advertisment

நடிப்பில் வித்தியாசம் காட்டவா? என்று கேட்டால் கூட ஒருமுறை செய்து காண்பி என்பார். அந்தளவிற்கு நடிகர்களுடன் கலந்தாலோசிப்பார். அதே சமயம் அவர் ஒரு மாஸ்டர் க்ளாஸ் இயக்குநரும் கூட. ஒரு ஸ்கிரிப்டில் 10 கதாபாத்திரம் இருந்தாலும் அந்த பத்து பேரின் உடல்மொழி எப்படி இருக்க வேண்டும், நடிக்க வேண்டும் என்று தெளிவாக இருப்பார். இப்படி நிறைய விஷயங்கள் அவரிடம் கற்றுக்கொள்ள இருக்கிறது” என்றார். முன்னதாக வணங்கான் படப்பிடிப்பில் மமிதா பைஜூவை அடித்ததால் அவர் படத்திலிருந்து விலகியதாக பாலா மீது விமர்சனம் எழுந்தது. இதற்கு மமிதாவும் மறுப்பு தெரிவித்து தன்னை சிறந்த நடிகையாக மாற்ற பாலா மிகவும் உதவிகரமாக இருந்தாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.