Skip to main content

'இந்த படத்தை தீவிர அக்கறையோடு எடிட் செய்தேன்' - எடிட்டர் ரூபன்  

Published on 17/12/2018 | Edited on 17/12/2018
adangamaru

 

கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில், ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்த அடங்க மறு படம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் குறித்து இப்பட எடிட்டர் ரூபன் பேசும்போது...

 

 

"அடங்க மறு' படத்தின் ரேஸினஸ் நம் நரம்புகளில் உணரப்படும். வழக்கமாக, ஒரு படத்தின் படம் பிடிக்கப்பட்ட காட்சிகள், எடிட்டிங் டேபிளை அடையும் போது, காட்சியிம் உண்மையான உணர்வை கொடுக்க, பல கட்ட செயல்கள் தேவைப்படும். ஆனால், அடங்க மறு படத்தில் எடிட்டிங்கின் ஆரம்ப கட்டத்திலேயே அதன் முழு உணர்வையும் கொடுத்தது. என் மனதில் தோன்றிய  முதல் மற்றும் முன்னணி விஷயம், இந்த படத்தை தீவிர அக்கறையோடு எடிட் செய்ய வேண்டும் என்பது தான். ஒட்டு மொத்த குழுவுக்கும் நன்றி, குறிப்பாக, தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் படம் நன்றாக வர பொறுமையாக இருந்ததற்கு நன்றி. மேலும் ஸ்கிரிப்ட் டேபிள்' அல்லது 'எடிட்டிங் டேபிள்' தான்  படத்தின் விதியை முடிவு செய்யும் என்று சொல்வார்கள். ஆனால் கார்த்திக்கின் சிறப்பான செயல்முறை என் வேலையை எளிதாக்கியது, அதே நேரத்தில், நல்ல அவுட்புட் கொடுக்க கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. நிச்சயம் இந்த படம் ரசிகர்களை ரசிக்க வைக்கும் என வலுவாக நம்புகிறேன்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்