/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/467_4.jpg)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இந்த ஆண்டுக்கான ஆனி வருசாபிஷேக விழா கடந்த 15தேதி நடந்தது. இதில் ஆந்திர முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா தனது கணவர் இயக்குநர் ஆர்.கே செல்வமணியுடன் கலந்து கொண்டார். அப்போது அவரை பார்த்த பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும் இரண்டு பெண் தூய்மை பணியாளர்கள், ரோஜாவுடன் புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது ரோஜா அவர்களை தள்ளி நிற்க்கும்படி சொல்லியுள்ளதாக கூறப்பட்ய்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ, ரோஜா மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. அதாவது தூய்மை பணியாளர்களை அவமதித்து விட்டதாக கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தன் மீதான எழுந்த விமர்சனத்துக்கு ரோஜா தற்போது விளக்கமளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், “நான் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது நிறைய பேர் செல்பி எடுத்தனர். யாரையும் தடுக்கவில்லை. துப்புரவு தொழிலாளர்கள் ஓடி வந்ததால் விழுந்து விடப்போகிறார்கள் என்று கருதி மெதுவாக வாங்க என்று மட்டும்தான் கைகாட்டி பேசினேன். அவர்களை நான் தொடக்கூடாது அல்லது தள்ளி நில்லுங்கள் என்று சொல்லவில்லை. இதைத்தவறாக சித்தரித்து இருக்கிறார்கள். துப்புரவு தொழிலாளர்கள் செய்யும் பணி உயர்வானது. அவர்கள் மீது எனக்குமரியாதை இருக்கிறது. என் மீது காழ்ப்புணர்ச்சியோடு அவதூறு பரப்புவது வருத்தம் அளிக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)