90-களின் காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ரோஜா, இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு, நடிப்பிற்கு முழுக்கு போட்ட ரோஜா, அரசியலில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸில் இணைந்து பணியாற்றி வரும் இவர், நகரி தொகுதியின் எம்.எல்.ஏ-வாகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், நகரி தொகுதியில் நடைபெற்ற கபடி போட்டியைத் தொடங்கி வைக்க சிறப்பு விருந்தினராக ரோஜா அழைக்கப்பட்டிருந்தார். விழாவிற்கு வருகைபுரிந்த ரோஜா, போட்டியைத் துவக்கி வைத்துவிட்டு அங்கிருந்த வீரர்களுடன் இணைந்து கபடி விளையாடினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.