roja helped student pushpa educational fees

தமிழில் 90களில் பிரபலமான நடிகையாக வலம் வந்த ரோஜா, தற்போது ஆந்திர மாநிலம், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் கொரோனா காலத்தில் தனது தொகுதியை சேர்ந்த புஷ்பா என்ற மாணவியை தத்தெடுத்து கொண்டார். தாய், தந்தை என இரண்டு பேரையும் இழந்து வறுமையில் வாடிய மாணவி புஷ்பாவின் கல்வி செலவை முழுவதும் தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் புஷ்பா என்ற மாணவி தனது பள்ளி படிப்பை முடித்துவிட்டு நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்துள்ளார். மேலும் திருப்பதி பத்மாவதி மகளிர் கல்லூரியில் இடம் கிடைத்து முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் “மருத்துவ வசதி இல்லாமல் என் தாய், தந்தையர் இறந்ததைப் போன்று எந்தக் குழந்தைக்கும் அது போன்று ஒரு நிகழ்வு ஏற்படாமல், வருங்காலத்தில் என்னால் முடிந்த அனைத்து மருத்துவ உதவிகளையும் என்னைப் போன்ற குழந்தைகளுக்கு இலவசமாக கொடுப்பதே என் லட்சியம்" என பேசியுள்ளார். இவரது பேச்சிற்கு ரோஜாவும் அவரது கனவே ஆர்.கே செல்வமணியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Advertisment

புஷ்பா மாணவியின் கனவை நனவாக்கிய ரோஜாவை போல் தானும் உதவி செய்வேன் என்று மாணவி பேசியுள்ள இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது .