Advertisment

'முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தமிழ்நாட்டுக்கே அப்பா மாதிரி!' - நடிகை ரோஜா புகழாரம்

சீனாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ், தற்போது 190 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகையும், நகரி தொகுதி எம்.எல்.ஏவுமான ரோஜா கரோனா குறித்தும், தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

Advertisment

fvdf

''கரோனா வைரஸிடம் இருந்து நாம் பாதுகாப்பாக இருந்து கொண்டால் அது ஒரு ஜலதோஷம் போல் முடிந்து விடும். ஆனால் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால் உயிரே போய்விடும். தற்போது டெல்லியில் இருந்து வந்தவர்களால் கொரோனா அதிகமாகப் பரவுவதாக கூறுகிறார்கள். இவர்கள் போன்றவர்களை பார்த்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்யுங்கள். மருத்துவர்கள் 14 நாட்களில் உங்களுக்கு கொரோனா இருக்கின்றதா, இல்லையா என்பதைக் கண்டுபிடித்து முடிவைச் சொல்லி விடுவார்கள்.ஒரு குடும்பத் தலைவராக இருந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று தமிழ்நாட்டுக்கே ஒரு அப்பா மாதிரி இருந்து கரோனா விஷயத்திற்காக ஜனங்களுக்காகப் பார்த்து பார்த்து நல்லதைச் செய்து வருகிறார்.அவரை நான் மனப்பூர்வமாக பாராட்டுகிறேன்'' என கூறியுள்ளார்.

roja actress roja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe