சேலத்தில்மினிமாரத்தான்போட்டி நடைபெற்றது. சிறிய குழந்தைகள் முதல் 77வயதான முதியவர்கள் வரை கலந்துகொண்டனர். இந்த போட்டியை நடிகை ரோகிணி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். பின்புசெய்தியாளர்களைச்சந்தித்த அவர், பல்வேறுகேள்விகளுக்குப்பதிலளித்தார்.
அப்போது மோடியின் தமிழக வருகை குறித்து கேள்விக்கு, “பிரதமர் அடிக்கடிதமிழ்நாட்டிற்குத்தான் வருகிறார். தமிழ்நாடு, அவருக்குஅவ்ளோபிடித்துவிட்டது போல. ஆனால் அப்படி இல்லை. தொடர்ந்து வந்தாலாவது தமிழக மக்கள் தன்னைஏற்றுக்கொள்வார்கள்என நினைக்கிறார். அவரதுபதவிக்குண்டான எல்லா மரியாதையையும் நாம் கொடுக்கிறோம். அதே நேரத்தில்தமிழகத்துக்குத்தேவையான அனைத்துமே, ஒன்றியஅரசாங்கம்செய்தால்நல்லாயிருக்கும். சும்மாவந்துவிட்டுபோனால் மட்டும்பத்தாது” என்றார்.
மேலும், “தாய் மொழிரொம்பமுக்கியம் என மனோதத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள். அந்த தாய் மொழியில் தான் நம் குழந்தைகள் கற்றுக்கொள்ளவேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் தாய் மொழிகளைமுன்னெடுத்துபடித்தோமேயானால், அனைத்து மொழிக்கான முன்னேற்றமும் இருக்கும். நாம் நம்முடைய தாய் மொழியை உயர்த்திப் பிடிக்க வேண்டும். மாநில உரிமைகள் காக்கப்பட வேண்டும். அதை ஒவ்வொருசிட்டிசனும்உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பது முதன்மையான கடமை” என்றார்.