தரமணி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் வசந்த் ரவி. இவர் தற்போது நடித்திருக்கும் படம் ராக்கி. இந்த படத்தை புதுமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜாவும் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

vasanth ravi

Advertisment

ஜில் ஜங் ஜக், அவள் உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த ஷ்ரேயாஸ் கிருஷ்ணா இப்படத்திலும் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. காலம் ஒரு துரோகி... என வாய்ஸ் ஓவரில் தொடங்கும் ட்ரைலர் பல இண்டென்ஸான காட்சிகளுடன் இருக்கிறது. வெளியான உடனேயே சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வைரலாகி வருகிறது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="c4502157-ac94-4360-b4b9-8a2b339073bc" height="171" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/336x90.jpg" width="383" />

இப்படத்தின் ட்ரைலர் பலரை கவர்ந்துள்ள நிலையில் இந்த படம் நவம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.