/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rocky.jpg)
'தரமணி' படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பலரது பாராட்டுக்களைப் பெற்ற நடிகர் வசந்த் ரவி, தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'ராக்கி' படத்தில் நடித்துள்ளார். 'ராக்கி' படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் பாரதிராஜா நடித்துள்ளார். இப்படத்தைஆர்.ஏ.ஸ்டூடியோஸ் சி.ஆர். மனோஜ் குமார் தயாரித்திருந்த நிலையில், தற்போது ‘ராக்கி’ படத்தின் அனைத்து உரிமையையும் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் இணைந்து நடத்தும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. நடிகை நயன்தாரா கவுரவ தோற்றத்தில் நடித்துள்ள இப்படம், கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வரும் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், படத்தின் ப்ரோமோ வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் நடிகை நயன்தாரா கையில் சுத்தியலுடன்,“காலம் ஒரு துரோகி” என்ற வசனத்தோடு மிரட்டியுள்ளார். ஆக்சன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள ப்ரோமோ வீடியோ, தற்போது யூடியூப் தளத்தில் 3 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)