Rocky movie actor Vasanth Ravi to join the cast of Rajinikanth's Jailer

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நான்காவது முறையாக ரஜினிகாந்த் நடிக்கவுள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. இதற்கு முன்பு நடித்த 'எந்திரன்', 'பேட்ட' மற்றும் ''அண்ணாத்த' படங்கள் வசூல் ரீதியா வெற்றிபெற்றதால் தற்போது 'ஜெயிலர்' படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நெல்சன் இயக்கவுள்ள இப்படத்திற்கு அனிருத் இசைமைக்கவுள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

'ஜெயிலர்' படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது படத்தை பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி 'தரமணி', 'ராக்கி' போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த வசந்த் ரவி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். விரைவில் அதிகாரபூர்வமாக நடிகர், நடிகைகளின் அறிவிப்பை படக்குழு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment