Advertisment

'ராக்கெட்ரி - நம்பி விளைவு' - ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

Rocketry: The Nambi Effect - ott release date announced

Advertisment

மாதவன் இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான படம் 'ராக்கெட்ரி - நம்பி விளைவு'. இஸ்ரோவில் பணியாற்றிய வான்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் சூர்யா (தமிழில்) சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். தமிழ், இந்தி மற்றும் ஆங்கில மொழியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, திரைபிரபலம் ரஜினிகாந்த் உள்ளிட்ட ரசிகர்கள் பலரும் படத்தை பார்த்து பாராட்டியிருந்தனர்.

இந்நிலையில் 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி இப்படம் வருகிற ஜூலை 26-ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அமேசான் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து புதிய போஸ்டரையும் பகிர்ந்துள்ளார்கள்.

இதனிடையே நம்பி நாராயணன் அவரது குடும்பத்தினருடன் படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இதனை மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இது தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

amazon prime Madhavan Rocketry The Nambi Effect
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe