இஸ்ரோவில்பணியாற்றிய வான்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'ராக்கெட்ரி- நம்பி விளைவு' என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் மூலம் நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமாகிறார். மிகப்பெரிய விஞ்ஞானியாக அறியப்பட்டு பின் உளவாளி என முத்திரை குத்தப்பட்டு, அதன்மூலம் பல நெருக்கடிகளைச் சந்தித்தவர் நம்பி நாராயணன். பின்னாட்களில் அவர் நேர்மையானவர் என நிரூபிக்கப்பட்ட போதிலும் அவர் எதிர்கொண்ட இன்னல்களும் துயரங்களும் சொல்லி மாளாதவை. அவரது வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளபடம் என்பதால், இப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது முதலே எதிர்பார்ப்பு அதிகமானது.
ஏற்கனவே வெளியான இப்படத்தின்ட்ரைலர்ரசிகர்களிடையே நல்லவரவேற்பை பெற்றநிலையில் தற்போது படத்தின்ரிலீஸ்தேதியைபடக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'ராக்கெட்ரி- நம்பி விளைவு' படம் ஜூலை 1 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என 5 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
@ActorMadhavan, @NambiNOfficial@vijaymoolan#Rocketrythefilm@27thinvestments@agscinemas@ufomoviez@yrf@pharsfilmpic.twitter.com/r6bbhq0wnT
— Ranganathan Madhavan (@ActorMadhavan) February 14, 2022