the rock

Advertisment

டபுல்யூ.டபுல்யூ.ஈ.மூலம் ‘தி ராக்’ என உலகம் முழுவதும் அறியப்பட்டு, பின்னர் ஹாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கியவர் ட்வைன் ஜான்ஸன். உலகளவில் அதிக சம்பளம் பெரும் நடிகர்களில் முதல் நபராக இருக்கிறார். அந்தளவிற்கு இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது டிசி சூப்பர் ஹீரோ ப்ளாக் ஆடமாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

42 வயதான ஜான்ஸன், உடற்பயிற்சி மேற்கொண்டபோது 50 பவுண்ட் உபகரணம் தனது முகத்தில் விழுந்து கிழித்து இரத்தம் வழிகிறது. அந்த நிலையில் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisment

இரத்தம் வழிவதுடன் வீடியோவை பகிர்ந்த ராக், "சரி, இங்கே பாருங்கள். சில நேரங்கள், உடற்பயிற்சிக் கூடத்தில் சூழல் சற்று தீவிரமாகும். நாங்கள் இங்கு குழந்தைகள் விளையாட்டோ, குழந்தை பாடல்களோ பாடவில்லை. இப்படி அவ்வப்போது அடிபடும், இப்படி நடக்கும்" என்றார்.

இதன்பின் வழியும் இரத்தத்தை விரல்களால் துடைத்து விட்டு சிறிது ரத்தத்தை ருசி பார்க்கிறார் ஜான்ஸன். விரலைச் சுத்தம் செய்துவிட்டு இது மிக நன்றாக இருக்கிறது என்று கூறிவிட்டு மீண்டும் உடற்பயிற்சிக்கு செல்கிறார்.

இந்த காணொளியுடன் பதிவிட்டுள்ள ட்வைன் ஜான்ஸன், "50 பவுண்ட் எடையை தூக்கிப் போடும்போது அடிபட்டது. இதற்கு தையல்கள் தேவை. இரத்தத்தை சுவைத்து விட்டு, தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு பின்னர் சிகிச்சை செய்து கொள்ளலாம். இதுதான் இந்த கூடத்தின் விதிமுறை. எனது ரத்தம் சாஸைப் போல, டகிலாவைப் போல சுவையாக இருப்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.