Advertisment

காருக்குள் அமர முடியாமல் தவித்த  ‘தி ராக்’ ஜான்ஸன்...

dj

டபுல்யூ. டபுல்யூ. ஈ. மூலம் ‘தி ராக்’ என உலகம் முழுவதும் அறியப்பட்டு, பின்னர் ஹாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கியவர் ட்வைன் ஜான்ஸன். உலகளவில் அதிக சம்பளம் பெரும் நடிகர்களில் முதல் நபராக இருக்கிறார். அந்தளவிற்கு இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது டிசி சூப்பர் ஹீரோ ப்ளாக் ஆடமாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

42 வயதான ஜான்ஸன், உடற்பயிற்சி மேற்கொண்டபோது 50 பவுண்ட் உபகரணம் தனது முகத்தில் விழுந்து கிழித்து இரத்தம் வழியும் வீடியோவை பகிர்ந்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

Advertisment

இந்நிலையில் ஜான்ஸன் நடித்து வரும் ரெட் நோட்டீஸ் படத்தில் வரும் ஒரு கார் சேஸ் காட்சிக்காக போர்ஸே வகை ரேஸ் கார் ஒன்றில் அமர்ந்து ஜான்ஸன் சேஸ் செய்வதுபோல படமாக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஜான்ஸனால் அந்த சிறிய காருக்குள் சௌகரியமாக அமர முடியவில்லை. மிகவும் உயர்ந்த மற்றும் பலசாலியான ராக், அவருடைய உடல் அமைப்பு காருக்குள் அமருவதை விட அகண்டு இருப்பதே இதற்கு காரணம் என்று ஜான்ஸனே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த காரணத்தால் இப்படத்தின் ஷுட்டிங் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் அவர் அமர்வதற்கு சௌகரியமாக இருக்கும் காரை வைத்து படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

dwayne jhonson
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe