அட்லர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சொட்ட சொட்ட நனையுது’. இப்படம் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

Advertisment

இந்த நிகழ்வில் நடிகர் ரோபோ சங்கர் கலந்து கொண்டு பேசியதாவது, “என் வளர்ச்சியில் பத்திரிக்கை நண்பர்கள் ஆதரவு மிகப்பெரியது அவர்களுக்கு நன்றி. இது என் ஜாதிக்காரன் படம், அது வேறேதுமில்லை நகைச்சுவை ஜாதி தான். முழுக்க முழுக்க நகைச்சுவைப்படம் இது. நீங்கள் ரசித்துச் சிரிக்கும் படமாக இப்படம் இருக்கும். இயக்குநர் நவீத் ஃபரீத் அவ்வளவு அருமையாக இயக்கியுள்ளார். 

Advertisment

5 படம் நடித்த ஹீரோ, தன் இமேஜை உடைத்து மேடைக்கும் அதே கெட்டப்பில் வருவது மிகப்பெரிய விசயம். அவருக்கு வாழ்த்துக்கள். தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள். தொழில் நுட்ப கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். கல்லூரி வினோத் அவன் மிகச்சிறந்த எழுத்தாளர், அவன் சீக்கிரம் படம் இயக்க வேண்டும். விரைவில் நான் இயக்கும் படத்தில் கலக்கப்போவது யாரு ராஜாவும், வினோத்தும் பணியாற்றுவார்கள்” என்றார்.