Skip to main content

''சாவு பாட்டுக்கு ஆடுனாரு பாருங்க ஒரு டான்சு..! பாடியோட சேர்ந்து அவர் பாடியும் ஆடுது'' - ரோபோ ஷங்கர் 

Published on 02/11/2019 | Edited on 02/11/2019

ராபர்ட் மாஸ்டர் நடித்து இயக்கியுள்ள படம் 'அராத்து'. சின்னத்திரை நடிகை நீலிமாராணி நாயகியாக நடிக்கும் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் ரோபோ ஷங்கர் ராபர்ட் மாஸ்டர் குறித்து பேசியபோது...

 

rs

 

 

''ராபர்ட் மாஸ்டர் எங்களுக்கெல்லாம் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். குண்டாக உள்ளவர்கள் டான்ஸ் ஆடமுடியாது என்று சொல்லுவார்கள். ஆனால் அவரோ ஒரே ஃபிரேமில் பல விதைகளை காட்டி மிரளவைக்கிறார். அதுவும் சாவுக்கு 'சங்கி மங்கி' போன்ற ஒரு பாட்டை நான் பார்த்ததே இல்லை. அந்த பாட்டுக்கு ஆடுனாரு பாருங்க ஒரு டான்சு...பாடியோட சேர்ந்து அவர் பாடியும் ஆடுகிறது. இதுபோல் அவரால் மட்டுமே ஆடமுடியும். இதை ஏன் சொல்கிறேன் என்றால், நான் மதுரையில் ஸ்டேஜ் டான்சராக இருந்த காலகட்டத்தில் எங்களுக்கெல்லாம் இன்ஸபிரேஷனாக இருந்தவர்களில் ராபர்ட் மாஸ்டரும் ஒருவர். அந்த அளவு அவரது ஆட்டத்திறன் அற்புதமாக இருக்கும். மேலும் அவர் மனதளவில் குழந்தையாக இருந்தாலும், அவர் எப்போதுமே ஒரு அராத்து தான். அந்தளவு கலாட்டாக்கள் செய்வார்'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்