"உம்ம்மா... இதுதானே வேணும், வச்சுக்கோ" - கமல் - ரோபோ ஷங்கர் கலகல சந்திப்பு

robo shankar met kamalhaasan

இயக்குநர்லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விக்ரம்'.பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.மேலும் இப்படத்தின் வசூல் 300 கோடியைத்தாண்டியுள்ளது. இனி வரும் காலங்களில் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கப்படும் எனத்தெரிகிறது.

இதனிடையேநடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றிக்காகலோகேஷ்கனகராஜுக்குலெக்சஸ்கார்ஒன்றையும், படத்தில் உதவி இயக்குநராகபணியாற்றிய 13 பேருக்குடிவிஎஸ்அப்பாச்சிRTR 160பைக்கைபரிசாக அளித்தார்.அத்துடன்விக்ரம் படத்தில்சிறப்புத்தோற்றத்தில் நடித்த சூர்யாவிற்கு விலை உயர்ந்தரோலக்ஸ்கடிகாரத்தைப்பரிசாக அளித்தார்.

இதனைத்தொடர்ந்து திரை பிரபலங்கள் பலரும் கமல்ஹாசனை நேரில் சந்தித்து விக்ரம் படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்விக்ரம் படத்தின்வெற்றியைத்தொடர்ந்து கமலின் தீவிர ரசிகரானரோபோ ஷங்கர் அவரைநேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இந்த சந்திப்பில் கமலிடமிருந்துமுத்தம் ஒன்றுஅன்புபரிசாகவேண்டும் என்றுரோபோ ஷங்கர் கேட்டுள்ளார். இதையடுத்து கமல் உனக்கு முத்தம் தானே வேணும்இந்தாவச்சுக்கோஎன்று கொடுத்துள்ளார். தனதுஆஸ்தான நாயகன் கமலிடமிருந்து முத்தம் கிடைத்துள்ளதால்ரோபோ ஷங்கர் மகிழ்ச்சியில் உள்ளார்.

ACTOR KAMAL HASSHAN lokesh kanagaraj robo shankar vikram movie
இதையும் படியுங்கள்
Subscribe