Skip to main content

இந்தியனாகவும், தமிழனாகவும் பெருமைப்படுகிறேன்... தங்கம் வென்ற கோமதிக்கு உதவும் ரோபோ ஷங்கர்...

Published on 25/04/2019 | Edited on 25/04/2019

23 ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்றுது.
 

robo shankar

 

 

43 நாடுகளை சேர்ந்த தடகள வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றது. இதில் நடைபெற்ற 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த கோமதி மாரிமுத்து 2 நிமிடம் 20 நொடிகளில் கடந்து தங்க பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். இவரின் வெற்றிக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.  
 

இந்நிலையில், பதக்கம் வென்ற கோமதிக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ரோபோ ஷங்கர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது, “2 நாட்களுக்கு முன்பு நடந்த ஆசிய தடகளப் போட்டியில் அற்புதமாக தன் திறமையை வெளிக்காட்டிய அன்பு சகோதரி கோமதி மாரிமுத்துவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். அவருக்கு எனது சின்ன அன்புப் பரிசாக 1 லட்ச ரூபாய் கொடுக்கிறேன். இது பெருமையாக இருக்கிறது. இதற்கு முன்பாக ராணுவ வீரர் இறந்த குடும்பத்துக்கு கொண்டு போய் கொடுத்தேன். தமிழக ராணுவ வீரர் இறந்ததால் மிகவும் வருத்தத்துடன் அளித்தேன். நம்மைக் காக்கக் கூடிய எல்லைச் சாமிகளுக்கு ஒரு சின்ன விஷயமாக அதைச் செய்தேன்
 

ஆனால், கோமதி மாரிமுத்துக்கு பெருமையாக பண்ணுகிறேன். தந்தையாரும் இறந்து, பயிற்சியாளரும் இறந்து உடல்நிலையும் பாதிக்கப்பட்டு விடாமுயற்சியாக ஓடி ஜெயித்து தங்க மங்கை கோமதிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நானும் ரொம்ப கஷ்டப்பட்டு வந்த குடும்பம் தான். தன்னம்பிக்கையும் எவ்வித பின்புலம் இல்லாமல் வந்ததால், கஷ்டப்படுவர்களுடைய வலி என்னவென்று எனக்கு தெரியும். அதைத் தாண்டி அவ்வளவு வலிகளுடன் இன்று ஜெயித்துள்ளீர்கள் என்றால் உங்களுக்கு மிகப்பெரிய வாழ்த்துகள்.
 

அனைத்து பெண்களுக்கும் இது ஒரு ஊக்கமாக இருக்கும். அவ்வளவு தன்னம்பிக்கையுடன் ஆசியளவிலான தடகளப் போட்டியில் ஜெயித்திருக்கிறார் என்றால், அது பாராட்டக்கூடிய விஷயம். என்னால் முடிந்த சிறுதொகை 1 லட்ச ரூபாய் கொடுப்பதில் பெருமைப்படுகிறேன். இன்னும் நிறைய விருதுகள் வாங்க வேண்டும். இந்தியனாகவும், தமிழனாகவும் பெருமைப்படுகிறேன்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திண்டுக்கலில் ரோபோ சங்கர்! களைகட்டிய கோவில் திருவிழா

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
Robot Shankar in Dindigul!  temple festival

திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா வருடந்தோறும் மாசி மாதம் நடப்பது வழக்கம். அது போல் இந்த வருடம் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.

Robot Shankar in Dindigul!  temple festival

இந்த திருவிழாவின்போது வருடந்தோறும் தரணி குழும நிறுவனத்தின் தலைவரான பிரபல தொழில் அதிபர் ரத்தனம் சார்பில் கோட்டை மாரியம்மன் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்திலும் கலையரங்க வளாகத்திலும் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானமும் வழங்கி இரவு கலைநிகழ்ச்சி நடத்துவதும் வழக்கம். அதுபோல் இந்த வருடம் வழக்கத்திற்கு அதிகமாக ஏழாயிரம் பேருக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Robot Shankar in Dindigul!  temple festival

இந்த அன்னதானத்தை தொழில் அதிபர் ரத்தனம் துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து ரத்தனத்தின் மகன்களான ஜி.டி.என்.கலைக் கல்லூரியின் நிர்வாக இயக்குநர் துரை மற்றும் திண்டுக்கல் மாநகர 17ஆவது வார்டு கவுன்சிலரும், வக்கீலுமான வெங்கடேஷ் ஆகியோர் அன்னதானத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு உணவு வழங்கினர். அதைத் தொடர்ந்து இரவு நடிகர் ரோபோ சங்கர், திரைப்பட இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, தேவகோட்டை அபிராமி, நடிகர் புகழ் ஆகியோரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 

Next Story

‘உனக்காக வாழ நெனைக்கிறேன்…' - இந்திரஜா ஷங்கரின் நிச்சயதார்த்த க்ளிக்ஸ்

Published on 03/02/2024 | Edited on 03/02/2024

 

நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா. இவர் தமிழில் பிகில், விருமன் மற்றும் தெலுங்கில் பாகல் உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் கார்த்திக் என்பவரைத் திருமணம் செய்யவுள்ளார். ரோபோ ஷங்கரின் உறவினரான கார்த்திக் மதுரையில் ‘தொடர்வோம்’ என்கிற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இந்திரஜா - கார்த்திக் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் தம்பதிகளின் குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர். இதில் நக்கீரன் ஆசிரியரும் கலந்துகொண்டு தம்பதிகளை வாழ்த்தினார்.