/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thavasi-robo-shankar.jpg)
'கருப்பன் குசும்புக்காரன்' என்ற ஒற்றை வசனத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் தவசி. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில், சூரிக்கு அப்பாவாக இவர் நடித்த கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பெற்றது, ரசிக்கப்பட்டது. இவர் பாரதிராஜாவின், 'கிழக்குச் சீமையிலே' படத்திலிருந்து தனது சினிமா பயணத்தை தொடங்கியுள்ளார்.
கிடா மீசையில் பல படங்களில் நடித்து வந்த தவசி, தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகவும் மெலிந்து, எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் தவசி குறித்து பேசியவர், புற்றுநோய் பாதிப்பால் அவதிப்படுவதாகவும், மருத்துவச் சிகிச்சைக்குப் பணஉதவி வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்திருக்கிறார். நடிகர் தவசியின் மகன் சமூக வலைதளத்தில் பண உதவி கேட்டு வேண்டுகோள் வைத்தார்.
அவரின் நிலையை அறிந்த, திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும் மருத்துவருமான சரவணன், அவருக்கு இலவசமாக சிகிச்சை அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி, விஜய் சேதுபதி, சிம்பு உள்ளிட்டோர் நிதியுதவி அளித்தனர்.
இந்தநிலையில், புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் தவசியை நடிகர் ரோபோ ஷங்கர் இன்று மதுரைக்குச் சென்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, “உங்களை மீசையோடு பார்க்கணும், I'm back-னு வந்து சொல்லனும்” என்று ரோபோ ஷங்கர் தவசியிடம் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது. மேலும், மருத்துவச் செலவிற்கு உதவித்தொகையும் கொடுத்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)