Advertisment

ஏன் அமைதியாவே இருக்கீங்க- பத்திரிகையாளர் சந்திப்பில் ரோபோ ஷங்கர் ஆதங்கம்...

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, சதீஷ், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'Mr.லோக்கல்'. இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசயமைக்க, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. வருகிற மே 17ஆம் தேதி படம் உலகமெங்கும் வெளியாகிறது.

Advertisment

robo shankar

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்நிலையில் இன்று இப்படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு மதியம் நடைபெற்றது. இதில் நயன்தாராவை தவிர சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர், தயாரிப்பாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது ரோபோ ஷங்கர் படத்தை பற்றியும் படக்குழுவை பற்றியும் பேசிக்கொண்டிருந்தார். இறுதியாக பேசி முடிக்கும்போது, எனக்கு ஒரு சந்தேகம் வெகு நாட்களாக இருக்கிறது. ஏன் பத்திரிகையாளர்களுக்கு படக்குழு அழைப்பு விடுத்து படத்தை போட்டுக்காட்டினால் ஏன் அமைதியாகவே இருக்கிறீர்கள். ஏன் அமைதியாகவே இருக்கிறீர்கள். குடும்பத்துடன் சென்றால் இப்படிதான் பார்ப்பீர்களா? என்று கேட்டார் ரோபோ ஷங்கர்.

Advertisment

இதனையடுத்து நான் பார்த்த வரையில் பத்திரிகையாளர்கள் வேலைணு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்திற்குதான் கைதட்டி ரசித்து பார்த்தீர்கள். அதன்பின்னர் நான் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பார்க்கும்போது அமைதியாகவேதான் இருக்கிறீர்கள் என்று முதலில் வாக்குவாதம் செய்வதுபோல கேள்வி கேட்க, அதற்கு அங்கிருந்த பத்திரிகையாளர்கள், “ நாங்கள் சரியாக உங்களை பற்றி எழுதியதால்தான் நீங்கள் இந்த இடத்தில் இருக்கிறீர்கள். இது ஆடியோ லாஞ்ச் இல்லை, பத்திரிகையாளர்கள் சந்திப்பு. இங்கு நாங்கள் படத்தை கவனித்து எழுதவும், படக்குழு பேசுவதையும்தான் கவனித்து எழுத வந்திருக்கிறோம்”என்றனர். சிறிது நேரம் அவ்விடத்தில் குழப்பமாகவே இருந்தது. பின்னர், கடைசியாக ரோபோ ஷங்கர் நார்மலாக பேசி அங்கிருந்த அனைவரையும் சிரிக்க வைத்து குழப்பத்தை தீர்த்துவிட்டார்.

mr.local robo shankar
இதையும் படியுங்கள்
Subscribe