/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/234_16.jpg)
பேராசிரியர் ஸ்ரீனி சௌந்தராஜன் இயக்கி நடித்திருக்கும் படம் கபில் ரிட்டன்ஸ். தனலட்சுமி கிரியேஷன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ராஜ்பிரதாப் இசையமைத்துள்ளார். இப்படம் நவம்பர் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் சிறப்பு காட்சி சென்னையில் நடைபெற்றது. இதில் ரோபோ ஷங்கரும் கலந்து கொண்டார்.
பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் படக்குழுவினரை பாராட்டினார். பின்பு அவர்களுடைய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, கமல் - மணிரத்னம் கூட்டணி 36 ஆண்டுகள் கழித்து கமலின் 234வது படத்திற்கு கைகோர்த்துள்ளது பற்றிய கேள்விக்கு, "36 வருஷம் கழித்து எனக்கு நானே கமலா தியேட்டரை உண்டு இல்லைனு ஆக்கணும்னு ரெடி பண்ணி வச்சிருக்கன். அப்பப்ப கமல் அலுவலகத்தில் அப்டேட் கேட்டுவருகிறேன். படம் வெளியாகும் பொழுது எந்த தேதியாக இருந்தாலும் நாயகன் படம் வெளியான போது மிக பிரம்மாண்டமான விழாவாக கமல் தியேட்டரில் நான் எடுத்து நடத்த போகிறேன். அதற்கான ஏற்பாடுகளை தயார் செய்துவிட்டேன். இதுவரையில் தமிழகத்தில் யாரும் கொண்டாடாத அளவிற்கு கொண்டாட திட்டமிட்டுள்ளேன். ரோகிணி திரையரங்கை விட 20 மடங்கு கமலா திரையரங்கில் நடக்கும். அதற்காக தியேட்டர் உரிமையாளர்களிடம் முறையான அனுமதி வாங்கியுள்ளேன்" என்றார்.
லியோ படத்தில் கமல் குரல் வந்தது தொடர்பாக சிலர் கிண்டல் செய்து வந்ததாக கேட்கப்பட்ட கேள்விக்கு, "கமல் சார் என்ன கிழிச்சார் என்று சொல்வதற்கான தகுதி யாருக்குமே கிடையாது. இந்த வருஷம் நான் அடிக்க கூடிய போஸ்டரே அதை பற்றி தான். உம்மை தெரியாதவர்கள் இவ்வுலகில் யாரும் இல்லை. உம்மை தெரியாதவர்கள் இவ்வுலகில் இருந்தும் தேவையில்லை. இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. லியோ பட இறுதியில் கமல் சாரின் குரல் வரும் போது தியேட்டரே கிழியுது. அதற்கு மேல் என்ன வேண்டும்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)