Robbery at Shilpa Shetty house

இந்தியில் பிரபல நடிகையாக வலம் வரும் ஷில்பா ஷெட்டி தற்போது 'இந்தியன் போலீஸ் போர்ஸ்' என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். ரோஹித் ஷெட்டி மற்றும் சுஷ்வந்த் பிரகாஷ் இயக்கி வரும் இந்த சீரிஸ் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. மேலும் சுகீ என்ற இந்தி படத்தில் நடித்துள்ள நிலையில் கன்னடத்திலும் ஒருபடம் நடிக்கிறார்.

Advertisment

நடிப்பதில் பிசியாக இருக்கும் ஷில்பா ஷெட்டி கடந்த 8 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக இத்தாலி சென்ற அவர் இன்னும் தனது குடும்பத்துடன் அங்கு இருக்கிறார். இதனிடையே கடந்த வாரம் மும்பையில் உள்ள அவரது வீட்டில் விலையுயர்ந்த பொருட்கள் திருடு போயுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில் அந்த புகாரின் பேரில்விசாரணை நடத்திய போலீசார் 2 பேருக்கு அந்த திருட்டில் தொடர்புள்ளதைஅறிந்து அவர்களை இன்று கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.