Advertisment

தேசிய விருது பெற்ற இயக்குநர் வீட்டில் கொள்ளை!

 Robbery at National Award winning director's house

காக்கா முட்டை, கடைசி விவசாயி போன்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் மணிகண்டன். இந்த படங்களுக்காக தேசிய விருது பெற்றவர். சினிமா சம்பந்தப்பட்ட வேலைக்காக மட்டும் சென்னைக்கு வருகிறவர் சொந்த ஊரான மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள எழில்நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் இயக்குநர் மணிகண்டன் வீட்டில் மர்மநபர்கள்பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

இயக்குநர் மணிகண்டன் வேலை விசயமாக சென்னையில் இருந்திருக்கிறார். அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இந்த திருட்டு நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக 1 லட்ச ரூபாய் ரொக்க தொகையும், 5 சவரன் நகையும் காணாமல் போயிருக்கிறது என்று விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

Advertisment
police national award Director Manikandan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe