Advertisment

எஸ்.ஜே சூர்யா பட நாயகியின் தந்தையிடம் கத்திமுனையில் வழிப்பறி!

hryh

எஸ்.ஜே சூர்யாவின் 'அன்பே ஆருயிரே', 'இசை' மற்றும் 'மருதமலை','ஜாம்பவான்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மீரா சோப்ரா தந்தை நடைபயிற்சி செய்து கொண்டிருக்கும் போது சிலர் வந்து அவரை மிரட்டித் திருடியதாக மீரா சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

Advertisment

"என் தந்தை போலீஸ் காலனியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். ஸ்கூட்டரில் வந்த இருவர் கத்தியைக் காட்டி அவரை மிரட்டி அவரது மொபைலைப் பறித்துக் கொண்டனர். இதுதான் டெல்லியின் பாதுகாப்பு நிலை" என்று டெல்லி காவல்துறை, முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரை டேக் செய்து பதிவிட்டிருந்தார். இதற்கு உடனடியாக டெல்லி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து டெல்லி காவல்துறைக்கு நன்றி தெரிவித்து மீண்டும் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... "உடனடி நடவடிக்கை எடுத்த வடக்கு டெல்லி காவல்துறைக்கு நன்றி. நம் காவல்துறையால் பாதுகாக்கப்படும் போது பெருமையாக இருக்கிறது. எது திருடு போனது என்பது முக்கியமல்ல. நமது வீட்டுப் பெரியவர்களைப் பாதுகாப்பதுதான் மிக முக்கியம். டெல்லி காவல்துறைக்கு என் வணக்கங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். மீராவின் இந்தப் பதிவுகளுக்குப் பல்வேறு தரப்பிலுருந்து ஆதரவும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

Advertisment

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe