எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக கடந்த ஏப்ரலில் இறந்தார். இன்று அவரது பிறந்த தினம் என்பதால் அதை முன்னிட்டு அவர் நடத்தி வந்த சத்யா மூவிஸ் சார்பில் ‘தி கிங் மேக்கர்’ என்ற தலைப்பில் ஒரு பாடல் வெளியிடப்படுள்ளது.
இப்பாடல் ஆர்.எம்.வீரப்பனின் புகழையும் , அற்பணிப்பையும் போற்றுகிறது. இது தொடர்பாக பாடல் உருவாக்கியவர்கள் கூறியதாவது, “இனி வரும் காலம் அவரை நினைவு கொள்ளும் விதமாகவும் , மறைந்தும் ஒளியாய் நெஞ்சமெங்கும் நிறைந்த இந்த உன்னத மனிதரை கொண்டாடும் நோக்கத்துடனும் இந்த பாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது” என தெரிவித்துள்ளனர். இப்பாடலை கோவிந்த் என்பவர் பாடியிருக்க தரன் குமார் இசையமைத்துள்ளார். கு. கார்த்திக் வரிகள் எழுதியுள்ளார்.