master

Advertisment

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் தினத்தையொட்டி வெளியானது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதும், வணிக ரீதியாக படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். நடிகர் விஜய்யின் கதாபாத்திரம் பேசப்பட்டதைவிட விஜய் சேதுபதி நடித்திருந்த பவானி கதாபாத்திரமே அதிகம் பேசப்பட்டது.

இந்த நிலையில், பவானி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் யார் என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பவானி கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷை முதலில் நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

‘கைதி’ திரைப்படத்தில் முதலில் நடிகர் மன்சூர் அலிகானை நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருந்ததும், பின்னர் கார்த்தி அக்கதாபாத்திரத்தில் நடித்ததும் குறிப்பிடத்தக்கது.