Advertisment

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆர்.கே. சுரேஷ்

rk suresh then mavattam movie music director issue

தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஆர்.கே. சுரேஷ் தற்போது காடுவெட்டி படத்தில் நடித்து முடித்துள்ளார். சோலை ஆறுமுகம் இயக்கத்தில் மஞ்சள் ஸ்கீரீன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதனிடையே ஆருத்ரா நிதி மோசடி வழக்கில் சிக்கித் தலைமறைவாக இருந்த ஆர்.கே. சுரேஷ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அண்மையில் நடந்த காடுவெட்டி பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் செய்தியாளர்களை சந்தித்து படம் குறித்து பேசினார்.

Advertisment

இப்படத்தை அடுத்து தென் மாவட்டம் என்ற தலைப்பில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அவரது எக்ஸ் தள பக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆர்.கே. சுரேஷ் இப்படத்தை எழுதி இயக்குவதாகவும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

Advertisment

ஆனால் யுவன் ஷங்கர் ராஜா தென் மாவட்டம் பட போஸ்டர் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “தென் மாவட்டம் படத்தில் இசையமைப்பாளராக நான் கமிட்டாகவில்லை. யாரும் இது தொடர்பாக பேசவும் இல்லை” எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்து பதிவிட்ட ஆர்.கே சுரேஷ், “யுவன் சார் நீங்கள் எங்களுடன் ஒரு திரைப்படத்திற்கும் நேரடி இசை நிகழ்ச்சி ஒன்றுக்கும் ஒப்பந்தம் செய்துள்ளீர்கள். தயவுசெய்து ஒப்பந்தத்தை சரிபார்க்கவும்” என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஆர்.கே சுரேஷ் இசை அமைப்பாளர் சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், தென் மாவட்டம் படத்தின் புதிய இசை அமைப்பாளர் பற்றிய தகவல்விரைவில் அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

yuvan shankar raja rk suresh
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe