Advertisment

ரெட் ஜெயின்ட் நிறுவனத்தால் அழுத்தம் தரப்படுகிறதா? - ஆர் கே சுரேஷ் சொன்ன பதில் 

rk suresh talk about udhayanidhi stalin red giant

சீனுராமசாமி இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி நடித்துள்ள படம் 'மாமனிதன்'. இப்படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார். முதல் முறையாக இளையராஜாவும் -யுவன் ஷங்கர்ராஜாவும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின்ட்ரைலர்ரசிகர்களிடம் நல்லவரவேற்பைபெற்றுபடத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. 'ஒய்.எஸ்.ஆர்ஃபிலிம்ஸ்' நிறுவனம் சார்பாகயுவன் ஷங்கர் ராஜா இப்படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை தயாரிப்பாளரும், நடிகருமான ஆர். கே சுரேஷ் வாங்கியுள்ளார்.இப்படம் வருகிற ஜூன் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில்படக்குழுப்ரோமோஷன்பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர்கள்சந்திப்புஇன்று நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே சுரேஷ், இயக்குநர் சீனு ராமசாமி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டுபல கேள்விக்கு பதிலளித்தனர். இதில் ஆர்.கே சுரேஷிடம்நிருபர் ஒருவர், சமீபகாலமாக தமிழ் படங்கள் எல்லாவற்றையும் உதயநிதியின் ரெட் ஜெயின்ட்நிறுவனம் மட்டும் தான் வெளியிடுறாங்க. ஆனால் இப்போது முதல் முறையாக நீங்கள் மட்டும் தான் தமிழ் படத்தை வெளியிடுகிறீர்கள், இதனால் உங்களுக்கு ஏதாவது பிரச்சனைஅல்லது அழுத்தங்கள் ஏதும் கொடுக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பினர். இதற்குபதிலளித்த அவர், "சினிமா வேறு, அரசியல்வேறு, சினிமாக்குள்ள அரசியலை கொண்டுவர வேண்டாம். இந்த இந்த படத்தையும் சிட்டியில் உதயநிதியின் ரெட் ஜெயின்ட்தான்வெளியிடுகிறது. இந்நிறுவனம் விநியோகஸ்தர்களுக்கு கூடுதல் முறையில் வருமானத்தைகொடுக்கின்றனர். அதனால் ரெட் ஜெயின்ட்நிறுவனத்தின் முயற்சி வரவேற்கத்தக்கது" என்றார்

Advertisment

maamanithan rk suresh Udhayanidhi Stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe