Advertisment

'சின்ன கவுண்டர் 2' படத்தில் நடிக்கும் பிரபல தயாரிப்பாளர்... வெளியான புதிய அப்டேட்

rk suresh starring Chinna Gounder2 film

கடந்த 1991ஆம் ஆண்டுஇயக்குநர்ஆர்.வி உதயகுமார் இயக்கத்தில் 'சின்ன கவுண்டர்' படத்தில் நடிகர் விஜயகாந்த் நடித்திருந்தார். இதில் கதாநாயகியாக சுகன்யா நடிக்க செந்தில், கவுண்டமணி, மனோரம்மாஉள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியான இப்படம் பெரும் வெற்றிப் பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக இயக்குநர் ஆர்.வி உதயகுமார் கடந்த ஆண்டே கூறியிருந்த நிலையில் தற்போது அதற்கான பணிகளை தொடங்கியுள்ளார்.

Advertisment

இந்நிலையில் 'சின்ன கவுண்டர் 2' படத்தில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே சுரேஷ் நடிக்கவுள்ளார். இதனை ஆர்.கே சுரேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். முதலில் இப்படத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விரைவில் இப்படம் குறித்துஅடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இயக்குநர்ஆர்.வி.உதயகுமார், ரஜினி நடிப்பில் வெளியான 'எஜமான்', கமல் நடிப்பில் வெளியான 'சிங்காரவேலன்', கார்த்தி நடிப்பில் வெளியான 'பொன்னுமணி' ஆகிய பல வெற்றி படங்களைஇயக்கிய உள்ளதுகுறிப்பிடத்தக்கது.

rv udhayakumar Chinna Gounder 2 rk suresh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe